பி.எஸ்.எல் டி20: பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றார் ஸ்டீவ் ஸ்மித்

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடக் கூடாது என பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பி.எஸ்.எல் டி20: பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றார் ஸ்டீவ் ஸ்மித்
Published on

கராச்சி,

8 அணிகள் பங்கேற்கும் 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை லாகூர் மற்றும் கராச்சியில் நடக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போட்டிக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த போட்டிக்கு வெளிநாட்டு வீரர்களை அனுப்ப வேண்டாம், நீங்களே விலகி விடுங்கள். அதையும் மீறி வந்தால் எதுவும் நடக்கலாம் என அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமாத்-உல்-அரார் ஆயுதக்குழு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியில் பி.எஸ்.எல். போட்டியில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று பாகிஸ்தான் போய் சேர்ந்தார். பயங்கரவாதிகளின் மிரட்டல்கள் காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com