புச்சிபாபு கிரிக்கெட் அரையிறுதி: தமிழக லெவன் அணி 503 ரன்கள் குவிப்பு

தமிழக தலைவர் லெவன் அணி ஆட்ட நேரம் முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் - ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான அரையிறுதிஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக தலைவர் லெவன் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக தலைவர் லெவன் அணி ஆட்ட நேரம் முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்துள்ளது. அஜிதேஷ் 101 ரன்னும், ஆந்த்ரே சித்தார்த் 57 ரன்னும் எடுத்தனர். அம்பிரிஷ் 62 ரன்னுடனும், வித்யுத் 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அரியானா - ஐதராபாத் அணிகள் மோதும் மற்றொரு அரையிறுதியில் ஐதரபாத் அணி முதல் இன்னிங்சில் 225 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அரியானா முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்து இருந்தது.
2-வது நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்த அரியானா அணி 79.3 ஓவர்களில் 208 ரன்னில் அடங்கியது. 17 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






