பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பல்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி அந்த அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
பந்து வீச்சு, பீல்டிங்கில்  சொதப்பல்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்
Published on

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி அந்த அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இதில் பிரியான்ஷ் ஆர்யா (56 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (59 ரன்) அரைசதத்துடன் பஞ்சாப் நிர்ண யித்த 211 ரன் இலக்கை கேப்டன் அக்ஷர் பட்டேல் (56 ரன்), டேவிட் மில்லர் (51 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 19 ஓவர்களி டெல்லி அணி எட்டிப்பிடித்தது.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,

எங்கே தவறு நடந்தது என்பது குறித்து சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.

பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் மீண்டும் சொதப்பியதே பாதகத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எடுத்த 210 ரன்கள் நிச்சயமாக போதுமானது. ஆடுகளத்தில் பந்து 'சீம்' ஆன விதத்தையும், சீரற்ற முறையில் எகிறியதையும் பார்க்கையில் 30 ரன்கள் கூடுதலாக எடுத்ததாகவே நினைத்தேன். சாஹலை பந்து வீச வைக்கும் யோசனை எனது மனதில் இருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருப்பதை உணர்ந்ததால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நாங் கள் சரியான லைன் மற்றும் லெந்தில் பந்து வீசியிருந்தால் விக்கெட்டு களை வீழ்த்தி இருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அதனை செய்ய வில்லை. நான் எப்போதும் சொல்வது என்னவென்றால் துல்லியமான அளவிலும், சரியான இடத்திலும் பந்து வீசுவது தான் சிறப்பானதாகும். குறிப்பாக அத்தகைய சிறந்த பந்து வீச்சை புதிதாக வரும் பேட்ஸ்மேன் அடிப்பது எளிதானது கிடையாது. அப்படி பந்து வீசும் போது பேட்ஸ்மேன் தவறிழைத்து ஆட்டமிழக்கும் வாய்ப்பு கிடைக்கும். எங்களது திட்டமிடுதல் நேர்த்தியாக இல்லை' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com