புதிய சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ்... நீதிமன்றம் சென்ற உரிமையாளர்கள்.. என்ன நடந்தது..?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதுவரை ஒரு முறை இறுதிப்போட்டிக்கும், ஒரு முறை பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்வரும் மெகா ஏலத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் புதிய சிக்கல் ஒன்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிக்கியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மொத்தமாக பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, மோகித் பர்மன் மற்றும் கரண் பால் என்று 4 உரிமையாளர்கள் இருக்கின்றனர். இதில் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளை வைத்துள்ள நிலையில், மோகித் பர்மன் 48 சதவிகித பங்குகளை வைத்து கொண்டுள்ளார். மீதமுள்ள 6 சதவிகித பங்குகளை கரண் பால் வைத்துள்ளார்.

தற்போது மோகித் பர்மனிடம் உள்ள 48 சதவிகித பங்குகளில் 11.5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை எதிர்த்து பிரீத்தி ஜிந்தா தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோகித் பர்மன் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோகித் பர்மன் பேசுகையில், என்னிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்யும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com