மும்பை அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 200 ரன்கள் எடுத்தது.




மும்பை அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
Published on

தர்மசாலா,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள் கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். பஞ்சாப் அணியில் பிரியன்ஷி ஆர்யா 22 ரன்களில் வெளியேறினார். கூப்பர் கனோலி 21 ரன்களில் வெளியேறினார். அஸ்மதுல்லா ஒமர்சாய் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 200 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com