ஒருநாள் போட்டியில் ஓய்வு முடிவை அறிவித்தார் குயிண்டன் டி காக்

ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் ஓய்வு முடிவை அறிவித்தார் குயிண்டன் டி காக்
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.

தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.

140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com