லக்னோவுக்கு எதிரான வெற்றி குறித்து ரஹானே பேட்டி

ரிங்குசிங்கின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாக ரஹானே கூறினார்.
லக்னோவுக்கு எதிரான வெற்றி குறித்து ரஹானே பேட்டி
Published on

லக்னோ,

ஐபிஎல் தொடரின் இன்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை சென்று கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறியதாவது;

”இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 16 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் விளையாடிய விதம், ரிங்குவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடைசி ஓவரில் ஆட்டம் எங்கள் பக்கம் திருப்பியது அற்புதமாக இருந்தது. 160-170 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எங்கள் அணியினர் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது.

எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. தியாகியும், வைபவும் மிகவும் சிறப்பாக விளையாடினர். ரிங்கு சிங்கின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் சிறப்பாக விளையாடினார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com