ரகானே, ரகுவன்ஷி அதிரடி: கொல்கத்தா அணி 220 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது.
ரகானே,  ரகுவன்ஷி அதிரடி: கொல்கத்தா அணி 220 ரன்கள் குவிப்பு
Published on

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கிநடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ரகானே , ரகுவன்ஷி இருவரும் அரைசதம் அடித்தனர். பின் ஆலன் 37 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com