மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய ரகானே


மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து  திடீரென விலகிய ரகானே
x

ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என ரகானே தெரிவித்துள்ளார்.

மும்பை ,

இந்திய கிரிக்கெட்டின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரகானே மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக ரகானே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பதற்கு நான் முழு அர்ப்பணிப்புடன் இருப்பேன். மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் எனது பயணத்தைத் தொடர்ந்து, மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவேன். வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story