

புதுடெல்லி,
அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐரோப்பியன் டி20 பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்கும் ஒரு அணியான டப்ளின் கார்டி யன்சை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சி யாளருமான ராகுல் டிராவிட் வாங்கி இருக்கிறார்.
அந்த அணியின் கேப்ட னாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தமிழத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் கேப்டன் மற் றும் ஆலோசகராக செயல்பட உள்ளார். மற்ற 5 அணிகளையும் ஆஸ்திரே லியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச வீரர்கள் வசப்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.