இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம்

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #INDvsENG
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம்
Published on

லண்டன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய அணி வீரர்கள் முழு வீச்சில் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்சில் இன்று இலேசான மழை பெய்தது. இதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com