

கவுகாத்தி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல் சும் மோத உள்ளன.
இந்த நிலையில், கவுகாத்தியில் தற்போது மழை பெய்ததால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. போட்டி மழையால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.