ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்... மும்பைக்கு 151 ரன்கள் இலக்கு

மழையால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்... மும்பைக்கு 151 ரன்கள் இலக்கு
Published on

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதி வருகின்றன. முன்னதாக, மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் அதிரடியில் மிரட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. வைபவ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜுரேல் 2 ரன்களும், பராக் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், அரைசதம் கடந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com