

அகமதாபாத்,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணியின் துருவ் ஜொரேல் அதிகபட்சமாக 42 பந்துகளில் 75 ரன்களையும், ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 55 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் தரப்பில் ரபாடா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், குமார் குஷாரா களமிறக்கினர். குமார் 18 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பட்லர் 26 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரில் குஜராத் வெற்றிபெற 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், குஜராத் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்சை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் வீரர் ரவி பிஷ்போய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.