ஐபிஎல்: ராஜஸ்தான் - லக்னோ இன்று மோதல்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல்: ராஜஸ்தான் - லக்னோ இன்று மோதல்
Published on

ஜெய்ப்பூர்,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இன்னும் ஒரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ள நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகும். அதேவேளை, லக்னோ பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com