டக்-அவுட்டில் போன் பயன்படுத்திய ராஜஸ்தான் மேலாளர் - பிசிசிஐ நோட்டீஸ்

டக்-அவுட் பகுதியில் வீரர்கள், அணி ஊழியர்கள் என யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடததக்கது.
டக்-அவுட்டில் போன் பயன்படுத்திய ராஜஸ்தான் மேலாளர் - பிசிசிஐ நோட்டீஸ்
Published on

சென்னை,

கடந்த 10ம் தேதி வெள்ளிக்கிழமை அசாம் மாநிலம் கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 11-வது ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், அணியின் டக்-அவுட்டில் அமர்ந்தவாறு தனது மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் அணியின் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த செல்போன் திரையை எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

Also Read
2 பந்தில் 2 கேட்ச்… ஆனாலும் அவுட் இல்லை - ஐபிஎல்லில் அரிய சம்பவம்
டக்-அவுட்டில் போன் பயன்படுத்திய ராஜஸ்தான் மேலாளர் - பிசிசிஐ நோட்டீஸ்

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தரிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி அணியின் டக்-அவுட் பகுதியில் வீரர்கள், அணி ஊழியர்கள் என யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com