ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது ஆர்சிபி கேப்டனாக சாதனை படைத்த ரஜத் படிதார்


ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது ஆர்சிபி கேப்டனாக சாதனை படைத்த ரஜத் படிதார்
x

image courtesy:twitter/@IPL

சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார்.

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை ஆட உள்ளது.

இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரஜத் படிதார் சேப்பாக்கம் மைதானத்தில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஐ.பி.எல். வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் 50+ ரன்கள் அடித்த 2-வது ஆர்சிபி கேப்டன் என்ற மாபெரும் சாதனையை படிதார் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2013-ம் ஆண்டில் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 58 ரன்கள் அடித்திருந்தார். தற்போது 2-வது கேப்டனாக ரஜத் படிதார் அந்த சாதனையில் இணைந்துள்ளார்.

1 More update

Next Story