ரஜத் படிதார் அபாரம்... ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ரஜத் படிதார் அபாரம்... ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
Published on

கவுகாத்தி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங் களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதனிடையே மழை காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, மழை நின்ற பிறகு போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் பந்திலேயே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி, 32 ரன்கள் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் போல்ட் ஆனார். க்ருணால் பாண்டியா 1 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் ரஜத் படிதார் தனது அபாரமான ஆட்டத்தால் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். அவர் 35 பந்துகளில் அரைசதம் கடந்த படிதார், 40 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர், 15 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com