பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு
Published on

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36-வது தலைவராக தேர்வு ஆகியுள்ள ரமீஸ் ராஜா அடுத்த மூன்றாண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 255 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரமீஸ் ராஜா 8,674- ரன்கள் குவித்துள்ளார். 1984- 1997 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ரமீஸ் ராஜா விளையாடினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 200-2004 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் நிர்வாகியாகவும் இருந்தார். கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணணையாளராகவும் ரமீஸ் ராஜா பணியாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com