

சென்னை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-மத்தியபிரதேச (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இந்தூரில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:-
அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா இந்த்ராஜித் (துணை கேப்டன்), கவுசிக் காந்தி, பாபா அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், சாய்கிஷோர், கே.விக்னேஷ், எம்.முகமது, யோமகேஷ், கவுசிக், லோகேஷ்வர், கங்கா ஸ்ரீதர் ராஜூ, மலோலன் ரங்கராஜன், வி.லட்சுமண்.