ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அபார பந்துவீச்சு...ரெயில்வே அணி 184 ரன்னில் ஆல்-அவுட்

இதன் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அபார பந்துவீச்சு...ரெயில்வே அணி 184 ரன்னில் ஆல்-அவுட்
Published on: 

சென்னை,

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வரு கிறது. இதில் 'எலைட் குரூப்பில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இதன் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் (டி பிரிவு) முன்னாள் சாம்பியனான தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.

'டாஸ்' ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முத லில் பேட் செய்த ரெயில்வே அணி, தமிழக வீரர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 82 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய அந்த அணி ஜூபைர் அலியின் (75 ரன்) அரைசதத்தால் ஒரு வழியாக கவுரவமான நிலையை அடைந்தது.

53.3 ஓவர்களில் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னில் அடங்கி யது. தமிழக அணி தரப்பில் சோனு யாதவ், கேப்டன் சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டும், ஹேம்சுதேசன் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத் துள்ளது. விமல் குமர் ரன் எதுவும் எடுக்காமலும், ஜெகதீசன் 30 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்னிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். பாபா இந்திரஜித் 13 ரன்னுடனும், ஆந்த்ரே சித்தார்த் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

மும்பையில் நடக்கும் (டி பிரிவு) அரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. அங்ரிஷ் ரகுவன்ஷி 114 ரன்னும், முஷீர்கான் 109 ரன்னும் விளாசினர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com