

சென்னை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் டிரா கண்டது. இந்த நிலையில் தமிழக அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஒடிசாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கட்டாக்கில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகிய இருவரும் தமிழக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மலோலன் ரங்கராஜன், வேகப்பந்து வீச்சாளர் வி.லட்சுமண் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அணி வருமாறு:-
அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா இந்திராஜித் (துணைகேப்டன்), கவுசிக் காந்தி, பாபா அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சாய்கிஷோர், ரஹில் ஷா, கே.விக்னேஷ், யோமகேஷ், எல்.விக்னேஷ், ரோகித், கங்கா ஸ்ரீதர் ராஜூ, மலோலன் ரங்கராஜன், வி.லட்சுமண்.