

ராஜ்கோட்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. சுதிப் சட்டர்ஜி 47 ரன்னுடனும், விருத்திமான் சஹா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதிப் சட்டர்ஜி 81 ரன்னிலும் (241 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), விருத்திமான் சஹா 64 ரன்னிலும் (184 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஷபாஸ் அகமது 16 ரன்னில் அவுட் ஆனார்.