ரஞ்சி கோப்பை: 99 ரன்களுக்கு சுருண்ட பெங்கால் அணி

காஷ்மீர் அணி 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது

ரஞ்சி கோப்பை:  99 ரன்களுக்கு சுருண்ட பெங்கால் அணி
Published on

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்- ஜம்மு- காஷ்மீர் அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் கல்யாணியில் நடக்கிறது.

இதில் முதலில் பேட் செய்த பெங்கால் 328 ரன்கள் எடுத்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய காஷ்மீர் அணி 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 26 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. அகிப் நபி, சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதன் மூலம் ஜம்மு- காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட் டது. இதை நோக்கி ஆடும் காஷ்மீர் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக் கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com