ரஞ்சி கிரிக்கெட் காலிறுதி: கர்நாடகாவுக்கு 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

லோகேஷ் ராகுல் (60 ரன்), கருண் நாயர் (9 ரன்) களத்தில் உள்ளனர்.
ரஞ்சி கிரிக்கெட் காலிறுதி: கர்நாடகாவுக்கு 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

மும்பை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - கர்நாடகா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங் சில் முறையே மும்பை 120 ரன்களும், கர்நாடகா 173 ரன்களும் எடுத்தன. 53 பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை 377 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஆகாஷ் ஆனந்த் 70 ரன்களும், தனுஷ் கோடியன் 48 ரன்களும், துஷர் தேஷ் பாண்டே 47 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கர்நாடகாவுக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்த கர்நாடகா நேற்றைய முடி வில் 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல் (60 ரன்), கருண் நாயர் (9 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ஜாம்ஷெட்பூரில் நடந்த உத்தரகாண்டுக்கு எதிரான கால்இறுதியில் 136 ரன் கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஜார்கண்ட் 41.1 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மிஷ்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் உத்தரகாண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com