ரஞ்சி டிராபி அரையிறுதி: தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் அடித்து அசத்தல்

கர்நாடகா 174.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி: தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் அடித்து அசத்தல்
Published on

லக்னோ,

ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. கர்நாடகா- உத்தரகாண்ட் இடையிலான போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது. உத்தரகாணட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி கர்நாடகா முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் கே.எல். ராகுல் மற்றும் தேவ்தத் ஆகியோர் சதத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்திருந்தது.தேவ்தத் படிக்கல் 148 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

தொடர்ந்து விளையாடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் விளாசினார். 144 பந்தில் சதம் அடித்த படிக்கல், 288 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கருண் நாயர் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரவிச்சந்திரன் ஸ்மாரன் சதம் அடித்து விளையாடி வருகிறார். கர்நாடகா 174.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்துள்ளது. கே.எல். ராகுல் நேற்றைய ஆட்டத்தில் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com