ரஞ்சி கோப்பை: சண்டிகாரை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி


ரஞ்சி கோப்பை: சண்டிகாரை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி
x

image courtesy:twitter/@TNCACricket

தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் அடித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது.

சேலம்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகார் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சண்டிகார் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய தமிழகம் 301 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய சண்டிகார் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 97 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சண்டிகாருக்கு 403 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த சண்டிகார் அணி 50 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மனன் வோரா சதம் அடித்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட்டுகளை அறுவடை செய்தனர். விஜய் சங்கர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

1 More update

Next Story