இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஷித் கான்

அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஷித் கான்
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி கனடாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இந்த நிலையில், இந்திய ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியாவில் எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்த அன்பு நினைவில் இருக்கும். அகமதாபாத், சென்னை, டெல்லி என அனைவரும் அதிக எண்ணிக்கையில் வந்து எங்களுக்கு ஆதரவளித்தனர். நாங்கள் ஆப்கானிஸ்தானில் விளையாடுவது போல் உணர்ந்தேன். அனைவருக்கும் நன்றி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com