டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு கூட்டணியை கணித்த ரவி சாஸ்திரி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 11-15 வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.

அவரது கணிப்பின் படி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இடம்பெறுவார் என்று கணித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com