மனஅழுத்தத்தில் இருந்து மீண்டார்: பிக்பாஷ் கிரிக்கெட்டில் ஆடுகிறார், மேக்ஸ்வெல்

மனஅழுத்தத்தில் இருந்து மீண்டுள்ளதால், பிக்பாஷ் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் விளையாட உள்ளார்.
மனஅழுத்தத்தில் இருந்து மீண்டார்: பிக்பாஷ் கிரிக்கெட்டில் ஆடுகிறார், மேக்ஸ்வெல்
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் ஒன்றரை மாதத்திற்கு முன்பு, தான் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது விலகல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் 31 வயதான மேக்ஸ்வெல் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப தயாராகி விட்டதாக நேற்று தெரிவித்தார். பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக களம் இறங்க இருப்பதை உறுதி செய்துள்ளார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாலேயே இந்த ஓய்வை எடுத்ததாக கூறிய மேக்ஸ்வெல், நான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை எனது காதலி தான் முதலில் கண்டுபிடித்தார். அவர் தான் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பக்கபலமாக இருந்தார் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com