20 ஓவர் அணியில் இருந்து நீக்கம்: தேர்வு குழுவினரின் முடிவை மதிக்க வேண்டும்; ரஹானே கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியதால் அந்த இடத்தில் களம் கண்ட ரஹானே அடுத்தடுத்து 4 அரை சதங்கள் (55, 70, 53, 61) அடித்து அசத்தினார்.
20 ஓவர் அணியில் இருந்து நீக்கம்: தேர்வு குழுவினரின் முடிவை மதிக்க வேண்டும்; ரஹானே கருத்து
Published on

நாக்பூர்,

இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது குறித்து ரஹானேவிடம் கருத்து கேட்ட போது, நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினர் எடுக்கும் முடிவை நாங்கள் மதிக்க வேண்டும். அணிக்குள் போட்டி இருக்க வேண்டியது அவசியமானதாகும். போட்டி இருந்தால் அது உங்களது சிறந்த திறமையை வெளிக்கொணர உதவிகரமாக இருக்கும்.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்கு நன்மை பயக்கும் விதத்தில் விளையாட வேண்டும். நான் எப்பொழுதும் போட்டியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடரில் இருந்து நல்ல பார்மில் தொடருவதும், அடுத்தடுத்து 4 அரை சதங்கள் அடித்தததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ரோகித் சர்மாவுடன் இணைந்து இதுவரை 3 முறை 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் கொடுத்து இருக்கிறேன். எங்களது எண்ணம் எல்லாம் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். வரும் தொடர்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் எனது அரை சதத்தை சதமாக மாற்ற முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com