இந்திய அணியிலிருந்து நீக்கம்: சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட பதிவு

டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று சூர்யகுமார் யாதவ் கோப்பையை வென்றார்.
இந்திய அணியிலிருந்து நீக்கம்: சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட பதிவு
Published on

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டு உள்ளார். நடப்பு ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று சூர்யகுமார் யாதவ் கோப்பையை வென்றார்.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெறவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பின் சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில்,


இந்திய அணியின் மிகவும் திறமை வாய்ந்த இந்தக் குழு, வரவிருக்கும் சவால்களில் வெற்றி பெற வாழ்த்துகள்.என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com