ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதைத்தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியினருடன் ரிக்கி பாண்டிங் இணைகிறார். 2003 மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கின் அனுபவம், அந்த அணியை வலுப்படுத்த உதவும். ஏற்கனவே ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com