ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். #RickyPonting | #Australia
ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்
Published on

மெல்போர்ன்,

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது டேரன் லீமன் உள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக டிராய் கூலே, மற்றொரு பயிற்சியாளராக மாத்யூ மாட் உள்ளனர்.

டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்தவர் ரிக்கி பாண்டிங். அவர், கடந்த 2005-ஆம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2007 மற்றும் 2009-ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அவரது தலைமையில் விளையாடி உள்ளது.

துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், டாரென், டிராய், மாத்யூ ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார். இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி -20 தொடர், ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்குகிறது.

#RickyPonting | #Australia

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com