பகலிரவு டெஸ்டில் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: கபில் தேவ் சாதனையை முறியடித்தார்

இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ரிஷப் பண்ட் புதிய சாதனையை படைத்தார்.
பகலிரவு டெஸ்டில் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: கபில் தேவ் சாதனையை முறியடித்தார்
Published on

பெங்களூரு,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 107 ரன்னுக்கு சுருண்டது.

இதனை தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாடிய நிலையில், நெருக்கடியுடன் களமிறங்கிய ரிஷப் பண்ட், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். அவரின் அதிரடியால் டெஸ்ட் போட்டியை டி20 போட்டியாக மாற்றினார்.

அவர் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கபில் தேவ் 30 ரன்களில் அரைசதம் அடித்ததே சாதனையக இருந்தது.

சர்வதேச அளவில் டெஸ்டில் அதிவேகமாக அரைசமடித்தவர்களின் பட்டியலில் பண்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார் முதலிடத்தில் ஷாகித் அப்ரிடி (26 பந்துகளில் அரைசதம்) உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com