ரைசிங் ஸ்டார் ஆசிய கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
ரைசிங் ஸ்டார் ஆசிய கிரிக்கெட்:  இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பாங்காக்,

8 அணிகள் பங்கேற்றுள்ள வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

'ஏ' பிரிவில் அங்கம் வகித்த இந்திய 'ஏ' அணி நேற்று தனது கடைசி லீக்கில் நேபாளத்துடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த நேபாளத்தை 78 ரன்னில் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 7.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய இடக்கை சுழற்பந்து வீச் சாளர் தனுஜா கன்வார் ஆட்டநாயகிவிருதை பெற்றார். இந்த பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் அரைஇறுதிக்கு முன்னேறின.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com