நாட் அவுட் என நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியான் பராக்.. வைரல் வீடியோ


நாட் அவுட் என நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியான் பராக்.. வைரல் வீடியோ
x
தினத்தந்தி 10 April 2025 4:02 PM IST (Updated: 10 April 2025 4:06 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதின.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அடுத்து 218 ரன் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 52 ரன்கள் அடித்தார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், ரஷித்கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் 14 பந்துகளில் 26 ரன்கள் அடித்த நிலையில் கெஜ்ரோலியா பந்துவீச்சில் விக்க்ட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனடியாக நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார்.

டிவி ரீப்ளேயில் பந்து பேட்டிற்கு அருகே வந்த அதே சமயத்தில் பேட் தரையில் பட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வு காணப்பட்டதால் 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். இதனால் அதிருப்தியடைந்த ரியான் பராக், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட படியே வெளியேறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

1 More update

Next Story