

சென்னை,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் , ரியான் பராக் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியில் பராக் 3 ரன்களில் அவுட் ஆனார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “பராக் கேப்டனாக இருப்பதால்தான் அணியில் உள்ளார். ஸ்டைல் என்ற பெயரில் அலட்சியமாக விளையாடி அவுட் ஆனார். பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்” என்றார்.
இந்த போட்டியில் துருவ் ஜுரல் 81* ரன்களும், வைபவ் சூர்யவன்சி 78 ரன்களும் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். 202 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் , 18 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல பார்மில் உள்ளது. நாளை ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.