ரிஸ்வி அரைசதம்: மும்பை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

அரைசதமடித்து 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரிஸ்வி அரைசதம்: மும்பை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
Published on

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா வில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந் தியன்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதல் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் சூர்யா குமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சூர்யா குமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மேலும் அதிரடியாக விளையாடி ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் கேஎல் ராகுல் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஸ் ராணா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

மறுபுறம் நிசாங்கா , ரிஸ்வி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். நிசாங்கா 44 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் ரிஸ்வி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். அவர் அரைசதமடித்து 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com