இந்தியா- தென் ஆப்பிரிக்கா போட்டியை வர்ணனை செய்கிறார் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய உள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா போட்டியை வர்ணனை செய்கிறார் ஆர்.ஜே.பாலாஜி
Published on

சென்னை,

ஆர்.ஜே.-வாக இருந்து, தனது கடின உழைப்பின் மூலம் நடிகர், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் முன்பு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை வர்ணனையும் செய்து வந்தார். இவரது வர்ணனைக்கு ரசிகர்கள் அதிகம். இதற்கிடையே, கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக ஆர்.ஜே.பாலாஜி வர்ணனை செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய உள்ளார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எக்ஸ் தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com