

புதுடெல்லி,
சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.