ராபின் உத்தப்பா அதிரடி அரைசதம் : லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணி சிறப்பான தொடக்கம்

சிறப்பாக விளையாடிய ராபின் உத்தப்பா 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
Image Courtesy : Chennai IPL
Image Courtesy : Chennai IPL
Published on

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தார். பவர் பிளேவில் லக்னோ பந்து வீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து தற்போது மொயின் அலியும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டு வருகிறார்.

தற்போது வரை சென்னை அணி 7.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துதுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com