பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம்..!

இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது .இந்த பொதுக்கூட்டத்தில்  ஜெய் ஷா, சவுரவ் கங்குலி,  ராஜீவ் சுக்லா, அருண் சிங் துமல், ரோஜர் பின்னி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்து வரும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. அத்துடன் கங்குலி பெங்கால் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்து விட்டார். இதனால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு 67 வயதான பின்னி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயது ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com