ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா

சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரோகித் 76 ரன்கள் அடித்தார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ரோகித் சர்மா அரைசதம் அடிப்பது இது 9-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னருடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com