

மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மும்பை அணி நேற்று 'MI Mix' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது ரசிகர்களிடம் பேசிய ரோகித் சர்மா, நிச்சயமாக உங்களுக்காக 6வது கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம்" என்று உறுதி அளித்தார்.
மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.