தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா.. இந்திய கேப்டன் சுப்மன் கில் சொல்வது என்ன?


தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா..  இந்திய கேப்டன் சுப்மன் கில் சொல்வது என்ன?
x

ந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லிடம், ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தூரில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவில் தனது முதல் ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இழந்ததால், கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு குறித்து அஜின்கியா ரகானே, ஜாகீர் கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். அதேபோல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் சேர்த்து ரோகித் சர்மா வெறும் 61 (11, 24, 26) ரன்களையே அடித்துள்ளார். அவரது மோசமான பார்மும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லிடம், ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுப்மன் கில் கூறியதாவது:

”ரோகித் சர்மா மிகச் சிறப்பான பார்மில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தொடரிலிருந்தே, அதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் ஏற்கனவே கூறியது போல, கிடைக்கும் ஒவ்வொரு தொடக்கத்தையும் எப்போதும் பெரிய ஸ்கோர்களாக மாற்றுவது சாத்தியமில்லை.

இந்த நியூசிலாந்து தொடரிலும் ரோகித் சில நல்ல தொடக்கங்களை பெற்றுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக, அந்த தொடக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அவற்றை சதங்களாக மாற்ற வேண்டும் என்பதே எப்போதும் ஆசையாக இருக்கும். ஆனால் அதை ஒவ்வொரு முறையும் செய்ய முடியாது.” என்றார்.

1 More update

Next Story