

புதுடெல்லி,
இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 56 (37) ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார்.
34 வயதான ரோகித் சர்மா இதுவரை 116 ஆட்டங்களில் விளையாடி 4 சதம், 24 அரைசதம் உள்பட 3,038 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் 3,227 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் விராட்கோலியும் 3,115 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் கப்திலும் உள்ளனர்.