

மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் மிட்சேல் மார்ஷ் 44 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்கிலிஷ் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சன் செய்தார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 8 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இறுதியில், மார்க்ரம் 31 ரன்களும், ஹிம்மத் சிங் 40 ரன்களும் எடுக்க, 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, மும்பை அணி வெற்றி பெற நிர்ணயிக்கப்பட்ட 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மாமற்றும் ரிகெல்டன் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அவர்கள் இருவரும் லக்னோ பந்துவீச்சைச் சிதறடித்து, விரைவாக அரைசதம் அடித்தனர். பின்னர் ரிகெல்டன் 32 ரன்களில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய ரோஹித்தும் 44 ரன்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 11(13) ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12(7) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து நமந்தீர்- வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி மும்பை வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பையில் நமந்தீர் 23 (12)ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 10(4) ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ரோகித் சர்மா தொடர்பாக பேசிய மும்பை அணி வீரர் ரிக்கல்டன் கூறியதாவது,
ரோகித் சர்மா ஆட்டம் தனித்துவமானது. கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் அழுத்தத்தைக் கையாளும் விதமும், எப்போதும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும் விதமும் பிரமிக்க வைக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருடன் பேட் செய்வது எப்போதுமே ஒரு மகிழ்ச்சி.