ஜூன் 23: பத்மஸ்ரீ விருது வாங்கிய ரோகித் - 19 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

ரோகித் சர்மாவுக்கு நேற்று (ஜூன் 23) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஜூன் 23: பத்மஸ்ரீ விருது வாங்கிய ரோகித் - 19 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் வாழ்க்கையில் ஜூன் 23-ம் தேதி மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.

இந்திய அணியில் அறிமுகம்

கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடி ரோகித் சர்மா இந்திய அணிக்காக அறிமுகமானார். தற்போது அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் இந்த பயணத்தில் இந்தியாவுக்காக 67 டெஸ்ட், 285 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் முறையே 4,301, 11,720 மற்றும் 4,231 ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார்.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவராக திகழும் அவர், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் விளங்கி வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம்

மே 2025-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், 2024 ஜூன் 29-ல் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோகித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரா ஒருநாள் தொடரில் விளையாடியா ஆவர், அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருது

இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு நேற்று (ஜூன் 23) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் அறிமுகமான நாளிலேயே பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருப்பது ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com