ஐபிஎல்: சென்னை - பெங்களூரு இன்று மோதல்

சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது
ஐபிஎல்: சென்னை - பெங்களூரு இன்று மோதல்
Published on

பெங்களூரு,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ மோத உள்ளன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

1 ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 2 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை இரண்டிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com